இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1975ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، وَيَحْيَى بْنُ يَحْيَى، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ - زَادَ ابْنُ حُجْرٍ - فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
ஸஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஜுமுஆ(த் தொழுகைக்)குப் பின்னரே தவிர, கய்லூலா (பகல் உறக்கம்) கொள்வதோ மதிய உணவு உண்பதோ இல்லை. (அறிவிப்பாளர்களில் ஒருவரான அலி) இப்னு ஹுஜ்ர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் (இவ்வாறுதான் நாங்கள் செய்து வந்தோம்)" என்று கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح