இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1600சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْفِطْرِيُّ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْمَغْرِبِ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ فَلَمَّا صَلَّى قَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلاَةِ فِي الْبُيُوتِ ‏ ‏ ‏.‏
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அப்துல் அஷ்ஹல் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையைத் தொழுதார்கள். அவர்கள் தொழுது முடித்ததும், மக்களில் சிலர் எழுந்து நின்று நஃபில் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த (கூடுதல்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)