அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனநலம் குன்றியவர் மற்றும் தமது புத்தி (ஏதேனும் ஒன்றால்) ஆட்கொள்ளப்பட்டவர் கூறும் தலாக்கைத் தவிர மற்ற எல்லா தலாக்குகளும் செல்லும்."
இதனைத் திர்மிதீ பதிவு செய்துள்ளார். மேலும், "இது 'கரீப்' (அறிவிப்பாளர் தொடரில் தனித்தன்மை வாய்ந்த) ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் அதாஉ பின் அஜ்லான் பலவீனமானவர்; அவரது ஹதீஸ்கள் கைவிடப்பட்டவை" என்று இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.