حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ سَلَمَةَ بْنِ صَخْرٍ الْبَيَاضِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي الْمُظَاهِرِ يُوَاقِعُ قَبْلَ أَنْ يُكَفِّرَ قَالَ كَفَّارَةٌ وَاحِدَةٌ .
ஸலமா பின் ஸக்ர் அல்பயாழீ (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: (ஒருவர்) தனது மனைவியிடம் 'ளிஹார்' செய்துவிட்டு, பரிகாரம் செய்வதற்கு முன்பு அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டால் (அவர் செய்ய வேண்டியது பற்றி) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரேயொரு பரிகாரம் (மட்டுமே) (அவர் மீது) கடமையாகும்."
ஸலமா பின் ஸக்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ளிஹார் செய்துவிட்டு (தன் மனைவியைத் தன் தாயின் முதுகிற்கு ஒப்பிட்டு, அவளைத் தனக்கு ஹராமாக்கிக் கொண்டவர்), அதற்கான பரிகாரம் செய்வதற்கு முன்பு அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டால், "ஒரு பரிகாரம் மட்டுமே உள்ளது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதீ மற்றும் இப்னு மாஜா ஆகியோர் இதனை அறிவித்துள்ளார்கள்.
(தன் மனைவியை தாய்க்கு நிகராகக் கருதி விலகி இருக்கும்) 'ளிஹார்' செய்துவிட்டு, (அதற்கான) பரிகாரம் (கஃப்பாரா) செய்வதற்கு முன்பாகவே அவளுடன் உடலுறவு கொண்டவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (கூறுகையில்): "(அவர்) ஒரு பரிகாரம் (மட்டும் செய்தால் போதுமானது)" என்று கூறினார்கள்.