ஸவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் - நிச்சயமாக காய்ச்சல் என்பது நரக நெருப்பின் (வெப்பத்தின்) ஒரு பகுதியாகும் - அவர் அதனை குளிர்ந்த நீரைக் கொண்டு தம்மை விட்டும் அணைத்து விடட்டும். அவர் ஓடும் நதியை நோக்கிச் செல்லட்டும். (அந்நதியின்) நீரோட்டத்தை முன்னோக்கியவாறு (நின்று கொண்டு), ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு, சூரியன் உதிப்பதற்கு முன்பு, 'பிஸ்மில்லாஹி அல்லாஹும்மஷ்ஃபி அப்தக வஸத்திக் ரஸூலக' (அல்லாஹ்வின் பெயரால், யா அல்லாஹ்! உனது அடியானுக்கு குணமளிப்பாயாக; மேலும் உனது தூதரை (அவர் சொன்ன மருத்துவ முறையை) உண்மையாக்குவாயாக) என்று கூறி, அதில் மூன்று முறை மூழ்கி (குளிக்கட்டும்).
இவ்வாறு மூன்று நாட்கள் செய்யட்டும். மூன்று நாட்களில் குணமடையவில்லை எனில், ஐந்து நாட்கள் செய்யட்டும். ஐந்து நாட்களில் குணமடையவில்லை எனில், ஏழு நாட்கள் செய்யட்டும். ஏழு நாட்களில் குணமடையவில்லை எனில், ஒன்பது நாட்கள் செய்யட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் அனுமதியால் காய்ச்சலானது ஒன்பது நாட்களைத் தாண்டாது."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)
ஸவ்பான் (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், நிச்சயமாகக் காய்ச்சல் நரகத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அவர் அதைத் தண்ணீரால் தணிக்க வேண்டும். அவர் ஓடும் ஆற்றில் (முழுமையாக) மூழ்க வேண்டும், அதன் நீரோட்டத்தை முன்னோக்கி நிற்க வேண்டும். சுப்ஹு தொழுகைக்குப் பிறகும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவும்,
என்று கூறி, அதில் மூன்று முறை மூழ்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் (தொடர்ந்து) செய்ய வேண்டும். மூன்று நாட்களில் குணமாகவில்லை என்றால் ஐந்து நாட்களும், ஐந்து நாட்களில் குணமாகவில்லை என்றால் ஏழு நாட்களும், ஏழு நாட்களில் குணமாகவில்லை என்றால் ஒன்பது நாட்களும் (இவ்வாறு செய்ய வேண்டும்). ஏனெனில், மகத்துவமும் பெருமையும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால், அது ஒன்பது நாட்களைத் தாண்டாது.”
இதனை திர்மிதீ பதிவு செய்துள்ளார். மேலும், "இது ஒரு கரீப் ஹதீஸ்" என்று கூறியுள்ளார்.