"நிச்சயமாக எனது (மறுமைத்) தடாகம் (அல்-ஹவ்ள்), அய்லாவுக்கும் (ஷாம் தேசத்தின் எல்லை) சன்ஆவுக்கும் (யெமன் தேசத்தின் தலைநகர்) இடைப்பட்ட தூரத்தைப் போன்ற (பரப்பளவுடைய)தாகும். மேலும், அதில் வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையிலான குவளைகள் (தண்ணீர் அருந்தும் பாத்திரங்கள்) இருக்கும்."