அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் தமது (முஸ்லிம்) சகோதரரை ஒரு பாவத்திற்காகப் பழித்துக் காட்டுகிறாரோ, அவர் (தாமும்) அந்தப் பாவத்தைச் செய்யாமல் மரணிக்க மாட்டார்."
(அதாவது, அந்தச் சகோதரர் ஏற்கனவே தவ்பா செய்து மீண்டுவிட்ட ஒரு பாவத்திற்காக அவரைப் பழித்துக் காட்டுவதையே இது குறிக்கிறது).
இதனை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: "இது 'கரீப்' (அபூர்வமான) ஹதீஸாகும். இதன் இஸ்னாத் (அறிவிப்பாளர் தொடர்) தொடர்ச்சியானதல்ல; ஏனெனில், காலித் (பின் மஃதான்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களைச் சந்திக்கவில்லை."
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ, لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ } أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَسَنَدُهُ مُنْقَطِعٌ. [1] .
முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யாரேனும் தனது சகோதரனை (ஒரு முஸ்லிமை அல்லது மனிதனை) ஒரு பாவத்திற்காக பழித்துரைத்து இழிவுபடுத்தினால், தாமும் அந்தப் பாவத்தைச் செய்யாமல் அவர் மரணிக்க மாட்டார்.”
இதை திர்மிதீ அவர்கள் பதிவுசெய்து, ஹஸன் தரத்தில் உள்ளது எனத் தரம் பிரித்துள்ளார்கள். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும்.