இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4056ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ جَمَعَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ‏.‏
சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் போரின் நாளில் எனக்காகத் தம் பெற்றோர்களைக் குறிப்பிட்டார்கள் (அதாவது, 'என் தாயும் தந்தையும் உமக்காக அர்ப்பணமாகட்டும்' என்று கூறிப் பாராட்டினார்கள்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6169ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ
يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ - عَنْ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ ‏.‏
சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
உஹதுப் போர் நாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் தாய் தந்தையரை (உமக்கு ஈடாகட்டும் என்று கூறி) ஒருசேரக் குறிப்பிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح