அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்படுவதை விரும்புகிறேன்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (நபிமொழியின் இந்த வார்த்தைகளை) மூன்று முறை கூறுவார்கள். (மேலும்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சாட்சி கூறுகிறேன்' (என்று கூறுவார்கள்).