இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3265ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ ‏"‏‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، إِنْ كَانَتْ لَكَافِيَةً‏.‏ قَالَ ‏"‏ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا ‏"‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும்." ஒருவர் கேட்டார், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! இந்த (உலக) நெருப்பே (நிராகரிப்பாளர்களை வேதனை செய்ய) போதுமானதாக இருந்திருக்குமே!" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "(நரக நெருப்பு) அதன் மீது (உலக நெருப்பின் மீது) அறுபத்தொன்பது பாகங்கள் மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது (அதிகப்படுத்தப்பட்டுள்ளது); அந்த ஒவ்வொரு பாகமும் இந்த (உலக) நெருப்பின் வெப்பத்தைப் போன்றதாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2843 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيَّ - عَنْ
أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ نَارُكُمْ هَذِهِ
الَّتِي يُوقِدُ ابْنُ آدَمَ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ حَرِّ جَهَنَّمَ ‏"‏ ‏.‏ قَالُوا وَاللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً
يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّهَا فُضِّلَتْ عَلَيْهَا بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهَا مِثْلُ حَرِّهَا ‏"‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய மக்கள் மூட்டும் உங்களின் இந்த நெருப்பானது, நரக நெருப்பின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பாகமாகும்."
அதற்கு (தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! (தண்டனைக்கு) இதுவே போதுமானதாக இருந்திருக்குமே!" என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக நரக நெருப்பு இதைவிட அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது; அவை ஒவ்வொன்றும் இந்த (உலக) நெருப்பின் வெப்பத்தைப் போன்றதாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح