இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

9730முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا وَكِيعٌ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْأَمَةِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فِي الْمَسْجِدِ فَلَيْسَ لَهُ شَيْءٌ
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுகிறாரோ, அவருக்கு (நற்கூலி) ஏதுமில்லை."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)
إسناده ضعيف