அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அருள்மிக்கவனும் உயர்வுமிக்கவனுமாகிய அல்லாஹ் கூறினான், “ஆதமின் மகனே, முதல் துயரத்தின் அதிர்ச்சி ஏற்படும்போது (அதாவது, துயரச் செய்தி கேட்ட உடனேயே) நீ பொறுமையை மேற்கொண்டு, என்னிடமிருந்து உனது நற்கூலியை நாடினால், உனக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு எந்த நற்கூலியிலும் நான் திருப்தியடைய மாட்டேன்.”
அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமின் மகனே! உனது இரு கண்களை (உனது இரு மதிப்புமிக்க உறுப்புகளை) நான் எடுத்துக்கொள்ளும் போது, அந்த அதிர்ச்சியின்போது நீ பொறுமையைக் கடைப்பிடித்து, (அதற்கான) நற்கூலியை எதிர்பார்த்தால், உனக்குக் கூலியாகச் சொர்க்கத்தைத் தவிர வேறெதனையும் நான் பொருந்திக்கொள்வதில்லை.''