அப்துல்லாஹ் பின் உமைர் (ரலி) - அல்லது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) - அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் அடுத்த ஆண்டு வரை உயிருடன் இருந்தால், நிச்சயமாக ஒன்பதாம் நாளும் (நோன்பு) நோற்பேன்."
அபூபக்ர் (பின் அபீ ஷைபா) அவர்களின் அறிவிப்பில், "அதாவது ஆஷூரா தினத்தை (முன்னிட்டு ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்)" என்று இடம்பெற்றுள்ளது.