தங்கம் மற்றும் வெள்ளி குறித்து (அவற்றைச் சேமித்து வைப்பதைக் கண்டித்து குர்ஆன் வசனம்) அருளப்பட்ட போது, (நபித்தோழர்கள்) "அப்படியானால் நாங்கள் எந்த (வகையான) செல்வத்தை (சேமித்து) ஆக்கிக்கொள்ள வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள், "உங்களுக்காக அதை நான் (அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டு) அறிந்து வருகிறேன்" என்று கூறிவிட்டு, தமது ஒட்டகத்தில் விரைந்து சென்று (நபி (ஸல்) அவர்களை) அடைந்தார்கள். நான் (சவ்பான்) உமர் (ரழி) அவர்களைத் தொடர்ந்து சென்றேன்.
அப்போது உமர் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்தச் செல்வத்தை ஆக்கிக்கொள்ள வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் நன்றி செலுத்தும் உள்ளத்தையும், (அல்லாஹ்வை) நினைவுகூரும் நாவையும், அவரது மறுமை விவகாரங்களில் அவருக்கு உதவும் (நல்லறங்கள் புரியும்) மனைவியையும் (தமது சிறந்த செல்வமாக) ஆக்கிக் கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹஸன் லிகைரிஹி (பிற காரணங்களால் 'ஹஸன்' எனும் நிலையை அடைந்தது)