حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَنَا أَوْلَى، بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ، وَلَمْ يَتْرُكْ وَفَاءً، فَعَلَيْنَا قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ .
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) அவர்களுடைய உயிர்களை விடவும் அதிக உரிமை உடையவன் ஆவேன். எனவே, எவரேனும் கடன்பட்ட நிலையில் மரணித்து, அதனைத் திருப்பிச் செலுத்துவதற்கு (எந்தச் செல்வத்தையும்) அவர் விட்டுச் செல்லவில்லையானால், அதைச் செலுத்துவது நமது பொறுப்பாகும். மேலும், எவர் (ஏதேனும்) செல்வத்தை விட்டுச் செல்கிறாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கே உரியதாகும்."