அபூ உமாமா பின் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
" 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வும் அவனது தூதரும், பொறுப்பாளர் இல்லாதவருக்குப் பொறுப்பாவார்கள். மேலும், வாரிசு இல்லாதவருக்குத் தாய்மாமன் வாரிசாவார்" என்று கூறினார்கள்' என உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அபூ உபைதா (ரழி) அவர்களுக்கு எழுதினார்கள்."