இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கஅபா) இல்லத்தின் மூலைகளில் கருப்பு மூலையையும் (ஹஜருல் அஸ்வத்), ஜுமுஹி கோத்திரத்தாரின் வீடுகளுக்கு நேராக அதைத் தொடர்ந்துள்ள மூலையையும் (ருக்னுல் யமானி) தவிர வேறு எதையும் (தமது கையால்) தொடமாட்டார்கள்.