அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருந்து, என் மீதுள்ள கடனை (அடைப்பதற்காக) நான் ஒதுக்கி வைக்கும் ஒரு தீனாரைத் தவிர, (மற்ற) ஒரு தீனார் கூட என்னிடம் மீதம் இருக்கும் நிலையில், என் மீது மூன்று இரவுகள் கடந்து செல்வதை நான் விரும்பமாட்டேன்."