நபித்தோழர்களில் ஒருவரான அதிய்யா அஸ்ஸஃதீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தீங்குள்ள காரியங்களில் (சிக்கிக்கொள்வோமோ என்ற) அச்சத்தினால், தீங்கற்ற காரியங்களையும் விட்டுவிடும் வரை ஓர் அடியான் இறையச்சமுடையோரின் (முத்தகீன்களின்) நிலையை அடைய மாட்டான்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(தீங்கான அல்லது) பாவமான ஒன்றில் (விழுந்து விடுவோமோ) என்ற அச்சத்தினால், (தீங்கோ) பாவமோ இல்லாத ஒன்றைக் கூட ஓர் அடியான் விட்டுவிடாத வரை, அவன் (உண்மையான) இறையச்சமுடையவர்களின் (முத்தக்கீன்களின்) நிலையை அடைய மாட்டான்."