ஹம்மாம் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
ஜரீர் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள்; பிறகு உளூச் செய்தார்கள்; மேலும் (அப்போது) தம் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அவரிடம், "நீங்கள் இவ்வாறு செய்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள்; பிறகு உளூச் செய்தார்கள்; பின்னர் தம் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அதை நான் பார்த்தேன்" என்று கூறினார்கள்.
அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"இந்த ஹதீஸ் அவர்களுக்கு (மக்களுக்கு) மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் சூரத்துல் மாயிதா அருளப்பட்ட பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்" என்று இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.