இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

622ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ أَصَلَّيْتُمُ الْعَصْرَ فَقُلْنَا لَهُ إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنَ الظُّهْرِ ‏.‏ قَالَ فَصَلُّوا الْعَصْرَ ‏.‏ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ تِلْكَ صَلاَةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لاَ يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلاَّ قَلِيلاً ‏ ‏ ‏.‏
அலாஃ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் லுஹர் தொழுகையிலிருந்து திரும்பியதும் பஸ்ராவில் உள்ள அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம். அவருடைய வீடு பள்ளிவாசலுக்குப் பக்கத்திலேயே இருந்தது. நாங்கள் அவரிடம் சென்றபோது, "நீங்கள் அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுகையிலிருந்து திரும்பினோம்" என்று கூறினோம். அதற்கு அவர்கள், "அஸ்ரைத் தொழுங்கள்" என்றார்கள். எனவே, நாங்கள் எழுந்து தொழுதோம்.

நாங்கள் (தொழுது முடித்துத்) திரும்பியபோது அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:
"இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக் காத்திருப்பான். அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே வரும்போது, அவன் எழுந்து நான்கு முறை கொத்துவான். அதில் அவன் அல்லாஹ்வைக் குறைவாகவே நினைவுகூருவான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
511சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرِ بْنِ إِيَاسِ بْنِ مُقَاتِلِ بْنِ مُشَمْرِجِ بْنِ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا الْعَلاَءُ، أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ - وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ - فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ أَصَلَّيْتُمُ الْعَصْرَ قُلْنَا لاَ إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنَ الظُّهْرِ ‏.‏ قَالَ فَصَلُّوا الْعَصْرَ ‏.‏ قَالَ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ تِلْكَ صَلاَةُ الْمُنَافِقِ جَلَسَ يَرْقُبُ صَلاَةَ الْعَصْرِ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لاَ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا إِلاَّ قَلِيلاً ‏ ‏ ‏.‏
அல்-அலா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் பஸ்ராவிலுள்ள அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் இல்லத்திற்கு லுஹர் தொழுகையை முடித்தவுடன் சென்றோம். - அவர்களது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே இருந்தது - நாங்கள் அவர்களிடம் சென்றபோது, 'நீங்கள் அஸர் தொழுதுவிட்டீர்களா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'இல்லை! நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம்' என்று கூறினோம். அதற்கு அவர்கள், 'அஸர் தொழுங்கள்' என்றார்கள். நாங்கள் எழுந்து தொழுதோம். நாங்கள் (தொழுது) முடித்ததும் அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:

"இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் அமர்ந்து கொண்டு, (சூரியன்) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையில் வரும் வரை (அஸர் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். பிறகு எழுந்து நான்கு (ரக்அத்களை)க் கொத்துகிறான். அதில் அவன் அல்லாஹ்வைச் சிறிதளவே நினைவுகூருகிறான்."'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)