அலி இப்னு அபி தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: "அலியே! மூன்று காரியங்களைத் தாமதப்படுத்தக் கூடாது: தொழுகையை அதன் நேரம் வந்தவுடன், ஜனாஸாவை அது தயாரானவுடன், மற்றும் தகுதியானவர் கிடைத்தவுடன் மணமாகாத பெண்ணின் (திருமணத்தை)."