அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"தாங்கள் உறங்கித் தொழுகையைத் தவறவிட்டதாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் உறங்கும்போது (ஏற்படுவது) அலட்சியம் ஆகாது, மாறாக ஒருவர் விழித்திருக்கும்போது (ஏற்படுவதே) அலட்சியம் ஆகும். உங்களில் எவரேனும் ஒரு தொழுகையை மறந்தால் அல்லது உறங்கி அதைத் தவறவிட்டால், அவருக்கு நினைவு வரும்போது அதை அவர் தொழுதுகொள்ளட்டும்.'"