அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் மயக்கமுற்றுத் தமது சுயநினைவை இழந்தார்கள். எனவே (அந்நிலையில் தவறிய) தொழுகையை அவர்கள் (மீண்டும்) கழாச் செய்யவில்லை.
(இமாம்) மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இதற்குக் காரணம் (அத்தொழுகையின்) நேரம் கடந்துவிட்டதேயாகும். ஆனால், எவர் (தொழுகையின்) நேரம் இருக்கும்போதே மயக்கம் தெளிந்துவிடுகிறாரோ, அவர் (அத்தொழுகையைத்) தொழுதுகொள்ள வேண்டும்."
நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து பலரின் அறிவிப்பில் இவ்வாறே இடம்பெற்றுள்ளது. நாஃபிஉ (ரஹ்) வழியாக உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் 'ஒரு பகலும் ஒரு இரவும் (மயக்கமுற்றிருந்தார்கள்)' எனவும், நாஃபிஉ (ரஹ்) வழியாக அய்யூப் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் 'மூன்று நாட்கள்' எனவும் இடம்பெற்றுள்ளது.