அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் ஸஃபா (மலையின்) மீது இருந்தபோது (பின்வருமாறு) பிரார்த்தனை செய்தார்கள்:
"யா அல்லாஹ்! 'என்னை அழையுங்கள் (பிரார்த்தியுங்கள்), நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்' (குர்ஆன் 40:60) என்று நீ கூறியுள்ளாய். நிச்சயமாக நீ வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டாய். நீ எனக்கு இஸ்லாத்தின் பால் நேர்வழி காட்டியது போலவே, நான் முஸ்லிமாக மரணிக்கும் வரை அதை (இஸ்லாத்தை) என்னிடமிருந்து பறித்துவிட வேண்டாம் என உன்னிடம் நான் வேண்டுகிறேன்."