இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் (தவாஃப் அல்-இஃபாதா செய்வதற்கு முன்பாகத் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டவரைப் பற்றி) கூறினார்கள்:
"(அவர் அதற்குப் பரிகாரமாக) ஓர் உம்ராச் செய்ய வேண்டும்; மேலும், ஒரு பலிப்பிராணியை (ஹத்யு) அறுத்துப் பலியிட வேண்டும்."
ரபீஆ பின் அபீ அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்களும் இதைப் போன்றே கூறுபவர்களாக இருந்தார்கள் என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இதுவே (இவ்விவகாரத்தில்) நான் செவியுற்றவற்றில் மிகவும் சிறந்த (கருத்தாகும்)."