உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது, அவர்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (தொழுகையை) முடித்ததும், 'மக்கா வாசிகளே! உங்கள் தொழுகையை முழுமையாகத் தொழுங்கள்; ஏனெனில் நாங்கள் பயணிகள் (குறைத்துத் தொழுபவர்கள்) ஆவோம்' என்று கூறினார்கள்.
பின்னர், உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஆனால் (அங்குள்ள) மக்களிடம் அவர்கள் ஏதேனும் கூறியதாகச் செய்தி எங்களுக்கு எட்டவில்லை.