இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

وَأَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا، وَأَبُو بَكْرٍ قَالَا: نا أَبُو الْعَبَّاسِ، أنا الرَّبِيعُ، أنا الشَّافِعِيُّ، أنا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّ حَفْصَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ؓ " أَرْسَلَتْ بِعَاصِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ سَعْدٍ إِلَى أُخْتِهَا فَاطِمَةَ بِنْتِ عُمَرَ تُرْضِعُهُ عَشْرَ رَضَعَاتٍ لِيَدْخُلَ عَلَيْهَا وَهُوَ صَغِيرٌ يَرْضَعُ فَفَعَلَتْ وَكَانَ يَدْخُلُ عَلَيْهَا "
ஸஃபிய்யா பின்த் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரழி) அவர்கள், ஆஸிம் பின் அப்தில்லாஹ் பின் ஸஅத் (எனும் சிறுவனை)த் தமது சகோதரி ஃபாத்திமா பின்த் உமர் அவர்களிடம் பத்து முறை பாலூட்டுவதற்காக அனுப்பினார்கள். அவர் (ஆஸிம்) பாலருந்தும் சிறு குழந்தையாக இருக்கும்போதே (பால்குடி உறவின் மூலம்) அவர் தம்மிடம் (தடையின்றி) வந்து செல்வதற்காக இவ்வாறு செய்தார்கள். அவ்வாறே ஃபாத்திமா (ரழி) அவர்கள் (அவருக்குப்) பாலூட்டினார்கள். (இதன் காரணமாக) அவர் (ஆஸிம்) ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம் (மஹ்ரம் என்ற முறையில்) வந்து செல்பவராக இருந்தார்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له