இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1476முவத்தா மாலிக்
وَحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ الأَنْصَارِيِّ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ سُئِلَ عَنِ الرَّجُلِ تَكُونُ عَلَيْهِ رَقَبَةٌ هَلْ يَجُوزُ لَهُ أَنْ يُعْتِقَ وَلَدَ زِنًا قَالَ نَعَمْ ذَلِكَ يُجْزِئُ عَنْهُ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஃபதாலா பின் உபைத் அல்அன்சாரி (ரழி) அவர்களிடம், (கஃபாரா போன்ற) ஓர் அடிமையை விடுவிக்கும் கடமை உள்ள ஒரு மனிதர், (அடிமையாக இருக்கும்) முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விடுவிப்பது கூடுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம், அது அவருக்குப் போதுமானது" என்று கூறினார்கள்.
أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ الْمِهْرَجَانِيُّ , أنبأ أَبُو بَكْرِ بْنُ جَعْفَرٍ الْمُزَكِّي , ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ , ثنا ابْنُ بُكَيْرٍ , ثنا مَالِكٌ أَنَّهُ بَلَغَهُ عَنِ الْمَقْبُرِيِّ أَنَّهُ سُئِلَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ الرَّجُلِ يَكُونُ عَلَيْهِ الرَّقَبَةُ , هَلْ يُعْتِقُ ابْنَ زِنًا؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: " نَعَمْ "
அபூஹுரைரா (ரழி) அவர்களிடம், (பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டிய கடமை உள்ள ஒரு மனிதர், விபச்சாரத்தில் பிறந்தவரை (அடிமையாக இருக்கும் பட்சத்தில்) விடுதலை செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரழி) அவர்கள், "ஆம் (செய்யலாம்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له