அபூஹுரைரா (ரழி) அவர்களிடம், “ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டிய ஒருவர், அந்தக் கடமையை நிறைவேற்ற முறைதவறிப் பிறந்த ஒரு குழந்தையை விடுதலை செய்யலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரழி) அவர்கள், "ஆம். அது அவருக்குப் போதுமானதாகும்" என்று கூறினார்கள்.