அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
சுரைக்காய்க் குடுவை (உலர்ந்த சுரைக்காய் ஓடு) மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பேரீச்சம்பழம் அல்லது திராட்சையை ஊறவைத்து) 'நபீத்' (எனும் பானம்) தயாரிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)