இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5788ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பெருமையினாலும் அகங்காரத்தினாலும் தனது இசாரை (தரையில்) இழுத்துச் செல்பவனை மறுமை நாளில் அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5416ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ، - وَهُوَ ابْنُ زِيَادٍ
- قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَرَأَى، رَجُلاً يَجُرُّ إِزَارَهُ فَجَعَلَ يَضْرِبُ الأَرْضَ بِرِجْلِهِ وَهُوَ أَمِيرٌ
عَلَى الْبَحْرَيْنِ وَهُوَ يَقُولُ جَاءَ الأَمِيرُ جَاءَ الأَمِيرُ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
‏ ‏ إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى مَنْ يَجُرُّ إِزَارَهُ بَطَرًا ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஒருவர் தமது கீழாடையை இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது பஹ்ரைனின் ஆளுநராக (அமீராக) இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், தமது காலால் தரையைத் தட்டியவாறு, "ஆளுநர் வந்துவிட்டார்! ஆளுநர் வந்துவிட்டார்!" என்று கூறலானார்கள். (பிறகு அந்த மனிதரை நோக்கி) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பெருமையின் காரணமாகத் தமது கீழாடையை இழுத்துக்கொண்டு செல்பவனை அல்லாஹ் (மறுமை நாளில்) பார்க்க மாட்டான்' என்று கூறினார்கள்" என்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح