பஹ்ஸ் பின் ஹகீம் அவர்கள் தனது தந்தை வழியாக தனது பாட்டனார் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கொண்டுவரப்பட்டால், அது அன்பளிப்பா அல்லது தர்மமா என்று கேட்பார்கள். அது தர்மம் என்று கூறப்பட்டால், அவர்கள் உண்ண மாட்டார்கள், அது அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தமது கரத்தை நீட்டுவார்கள்."