أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ، وَكَانَتْ، مِمَّنْ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنْ لَمْ تَجِدِي شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلاَّ ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ .
உம்மு புஜைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவராவார்.) இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஏழை ஒருவர் என் வாசலில் நிற்கிறார்; ஆனால் அவருக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னிடம் அவருக்குக் கொடுப்பதற்கு கருகிய குளம்பைத் தவிர வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும், அதையாவது அவரிடம் கொடுத்துவிடு (ஏனெனில், அல்லாஹ்வின் பார்வையில் எந்தவொரு நற்செயலும் சிறியதல்ல)" என்று கூறினார்கள்.
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ، وَكَانَتْ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ . فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلاَّ ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ .
நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) செய்திருந்த உம்மு புஜைத் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்வின் அருளும் சாந்தியும்) தங்கள் மீது உண்டாகட்டும்! ஓர் ஏழை என் வாசலில் வந்து நிற்கிறார். ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இருப்பதில்லை" என்று நான் (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அவருக்குக் கொடுக்க கருகியதொரு குளம்பைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் இல்லையென்றாலும், அதையாவது அவருடைய கையில் கொடுத்துவிடு" என்று கூறினார்கள்.