முஸ்லிம் அல்-குரஷீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் கேட்டேன் அல்லது வேறு யாரோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தொடர் நோன்பு நோற்பது பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: உமது குடும்பத்திற்கு நீர் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன. ரமளான் மாதத்திலும், அதற்கு அடுத்த மாதத்திலும், மேலும் ஒவ்வொரு புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் நோன்பு நோற்பீராக. அப்போது நீர் தொடர் நோன்பு நோற்றவராவீர்.