இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2349சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صِيَامِ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ وَمَا صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا كَامِلاً مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ إِلاَّ رَمَضَانَ ‏.‏
அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் கூறினார்கள்:

நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இனி நோன்பை விடமாட்டார்கள்’ என்று நாங்கள் கூறும் அளவிற்கு (தொடர்ந்து) நோன்பு நோற்பார்கள்; மேலும், ‘இனி நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறும் அளவிற்கு நோன்பு நோற்காமலும் இருப்பார்கள். மதீனாவிற்கு வந்ததிலிருந்து ரமழானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுவதுமாக அவர்கள் நோன்பு நோற்றதில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)