وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ، الْهُذَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ .
நுபைஷா அல்-ஹுதலி (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள்:
தஷ்ரீக் நாட்கள் என்பவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அரஃபா நாளும், அறுத்துப் பலியிடும் நாளும், அத்தஷ்ரீக் நாட்களும் இஸ்லாமியர்களான நமது ஈத் (பெருநாள்) ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அரஃபா நாள், அறுப்புப் பெருநாள், தஷ்ரீக் உடைய நாட்கள் ஆகியவை இஸ்லாமிய சமூகமாகிய நமது பண்டிகை நாட்களாகும். இவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.