இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1186 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - عَنْ مُوسَى بْنِ، عُقْبَةَ عَنْ سَالِمٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ - رضى الله عنهما - إِذَا قِيلَ لَهُ الإِحْرَامُ مِنَ الْبَيْدَاءِ قَالَ الْبَيْدَاءُ الَّتِي تَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ عِنْدِ الشَّجَرَةِ حِينَ قَامَ بِهِ بَعِيرُهُ ‏.‏
ஸாலிம் அவர்கள் அறிவித்தார்கள்:
இப்னு உமர் (ரழி) அவர்களிடம், ‘இஹ்ராம் பைதாவிலிருந்து தொடங்குகிறது’ என்று கூறப்பட்டபோது அவர்கள் கூறினார்கள்:
“பைதா! அது குறித்துத்தான் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் ஒட்டகம் தம்முடன் எழுந்து நின்றபோது அந்த மரத்தின் அருகே அன்றி (வேறு எங்கும்) இஹ்ராம் மேற்கொள்ளவில்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح