حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ اللَّيْثِيَّ،، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُخْبِرُ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارَ وَحْشٍ وَهْوَ بِالأَبْوَاءِ ـ أَوْ بِوَدَّانَ ـ وَهْوَ مُحْرِمٌ فَرَدَّهُ، قَالَ صَعْبٌ فَلَمَّا عَرَفَ فِي وَجْهِي رَدَّهُ هَدِيَّتِي قَالَ لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ .
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான சஅப் பின் ஜத்தாமா அல்-லைதீ (ரலி), தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் ‘அல்-அப்வா’ அல்லது ‘வத்தான்’ என்னுமிடத்தில் இஹ்ராம் நிலையில் இருந்தபோது ஒரு காட்டுக்கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும், அதனை நபி (ஸல்) அவர்கள் தம்மிடமே திருப்பித் தந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் சஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “எனது அன்பளிப்பைத் திருப்பித் தந்ததால் என் முகத்தில் ஏற்பட்ட (வருத்தத்)தை நபி (ஸல்) அவர்கள் அறிந்துகொண்டபோது, ‘நாம் (உம்மை வெறுத்து) இதை உமக்குத் திருப்பித் தரவில்லை; ஆயினும், நாம் இஹ்ராம் நிலையில் இருக்கிறோம்’ என்று கூறினார்கள்.”
சஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நான் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். நான் அவர்களுக்கு ஒரு காட்டுக்கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதை என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். என் முகத்தில் (ஏற்பட்ட) வருத்தத்தை அவர்கள் கண்டபோது, ‘(இதை ஏற்பதில்) நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை; ஆயினும் நாம் இஹ்ராம் நிலையில் இருக்கிறோம் (என்பதாலேயே திருப்பிக் கொடுக்கிறோம்)’ என்று கூறினார்கள்.”