இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1335ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ، أَنَّ امْرَأَةً، مِنْ خَثْعَمَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ عَلَيْهِ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ وَهُوَ لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى ظَهْرِ بَعِيرِهِ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ فَحُجِّي عَنْهُ ‏ ‏ ‏.‏
ஃபள்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கத்அம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக என் தந்தை மிகவும் வயதானவர். ஹஜ் செய்வது தொடர்பான அல்லாஹ்வின் கடமை அவர் மீது உள்ளது. ஆனால், அவரால் ஒட்டகத்தின் முதுகில் சரியாக அமர்ந்திருக்க இயலவில்லை."
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح