முஹாரிஷ் அல்-கஅபீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக (இஹ்ராம் அணிந்து) அல்-ஜிஃரானாவிலிருந்து ஓர் இரவில் புறப்பட்டார்கள். (பிறகு) அங்கேயே இரவு தங்கியவரைப் போன்று காலையில் அல்-ஜிஃரானாவிலேயே இருந்தார்கள். பிறகு சூரியன் உச்சி சாய்ந்ததும், அல்-ஜிஃரானாவிலிருந்து புறப்பட்டு, சரிஃபிலிருந்து மதீனா செல்லும் பாதையைச் சந்திக்கும் வரை 'சரிஃப்' பள்ளத்தாக்கு வழியாகச் சென்றார்கள்.