ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளருக்கு ஒரு முள் தைப்பதாலோ அல்லது அதைவிட மேலான ஒரு துன்பம் ஏற்படுவதாலோ, அதன் காரணமாக அல்லாஹ் அவரின் தகுதியை உயர்த்தாமலோ அல்லது அவரின் பாவங்களை அழிக்காமலோ இருப்பதில்லை.