இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2573ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ،
كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي، هُرَيْرَةَ أَنَّهُمَا
سَمِعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلاَ نَصَبٍ وَلاَ
سَقَمٍ وَلاَ حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلاَّ كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ ‏ ‏ ‏.‏
அபூ ஸயீத் (ரழி) அவர்களும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கிறார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் எந்தவொரு சுகவீனமோ, கஷ்டமோ, நோயோ, துக்கமோ அல்லது ஒரு மனக்கவலையோகூட, அதற்காக அவரின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح