ஸாலிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அவர்களுடைய தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி), நபி (ஸல்) அவர்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும், உமர் (ரழி) அவர்களையும், உஸ்மான் (ரழி) அவர்களையும் ஜனாஸாவிற்கு முன்பாக நடந்து சென்றதைக் கண்டதாகத் தன்னிடம் தெரிவித்தார்கள். (இந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள) பக்ர் (இப்னு வாஇல்) மட்டும் உஸ்மான் (ரழி) அவர்களைக் குறிப்பிடவில்லை. அபூ அப்துர் ரஹ்மான் (இமாம் நஸாயீ) கூறினார்கள்: "இது ஒரு தவறு. சரியான அறிவிப்பு 'முர்ஸல்' வகையைச் சேர்ந்தது."