நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எடுத்துக்கொண்ட கை, அதைத் (அதன் உரிமையாளரிடம்) திருப்பிக் கொடுக்கும் வரை (அல்லது அதற்கு ஈடு செய்யும் வரை) அதற்குப் பொறுப்பாகும்."
பின்னர், அல்ஹஸன் (ரஹ்) அவர்கள் (நபிமொழியை) மறந்துவிட்டு, (ஒரு பொருளைப் பொறுப்பாகப் பெற்றவர் குறித்து) 'அவர் உங்கள் நம்பிக்கையாளர்; அவர் மீது எந்த இழப்பீடும் இல்லை' என்று கூறினார்கள்.