وَعَنْهُ; أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -قَالَ: { فِي الْمَوَاضِحِ خَمْسٌ, خَمْسٌ مِنْ اَلْإِبِلِ } رَوَاهُ أَحْمَدُ. وَالْأَرْبَعَةُ. وَزَادَ أَحْمَدُ: { وَالْأَصَابِعُ سَوَاءٌ, كُلُّهُنَّ عَشْرٌ, عَشْرٌ مِنَ اَلْإِبِلِ } وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ, وَابْنُ اَلْجَارُودِ. [1] .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எலும்பை வெளிக்காட்டும் காயத்திற்கு ஐந்து ஒட்டகங்கள் (ஈட்டுத் தொகையாக) வழங்கப்படும்.”
இதனை அஹ்மத் அவர்களும் நான்கு இமாம்களும் அறிவித்துள்ளார்கள்.
அஹ்மத் அவர்கள் பின்வருமாறு அதிகப்படுத்தியுள்ளார்கள்: “மேலும், கைவிரல்களும் கால்விரல்களும் சமமானவை; அவை ஒவ்வொன்றுக்கும் பத்து ஒட்டகங்கள்.”
இப்னு குஸைமா அவர்களும் இப்னுல் ஜாரூத் அவர்களும் இதனை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளனர்.