அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மற்ற நபிமார்களைவிட ஆறு விஷயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: சுருக்கமான ஆனால் விரிவான பொருள் கொண்ட வார்த்தைகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன; (பகைவர்களின் உள்ளங்களில்) அச்சத்தின் மூலம் எனக்கு உதவியளிக்கப்பட்டுள்ளது; கனீமத் பொருட்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன; பூமி எனக்குத் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது; நான் படைப்பினங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளேன்; மேலும், என்னைக் கொண்டு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது."