حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ عَبْدٍ يَمُوتُ لَهُ عِنْدَ اللَّهِ خَيْرٌ، يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَأَنَّ لَهُ الدُّنْيَا وَمَا فِيهَا، إِلاَّ الشَّهِيدَ، لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَإِنَّهُ يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்விடமிருந்து (மறுமையில்) நன்மையைப் பெற்ற பின்னர் மரணித்த எவரும், அவருக்கு இவ்வுலகம் முழுமையும் அதில் உள்ள அனைத்தும் கொடுக்கப்பட்டாலும் சரியே, இவ்வுலகிற்குத் திரும்பி வர விரும்பமாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவரைத் தவிர. அவர் உயிர்த்தியாகத்தின் மேன்மையை கண்டபின், இவ்வுலகிற்குத் திரும்பி வந்து (அல்லாஹ்வின் பாதையில்) மீண்டும் கொல்லப்பட விரும்புவார்."
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்விடம் தனக்கு நன்மை இருக்கப்பெற்று மரணித்த எவரும், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; உயிர்த்தியாகியைத் தவிர! நிச்சயமாக அவர், உயிர்த்தியாகத்தின் சிறப்பைக் காண்பதால், திரும்பி வந்து இவ்வுலகில் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்."