அவர் எதிரியை எதிர்கொண்டிருந்தபோது, "நிச்சயமாக, சொர்க்கத்தின் வாசல்கள் வாள்களின் நிழல்களின் கீழ் உள்ளன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.
அப்போது, எளிய தோற்றமுடைய ஒருவர் எழுந்து நின்று, "அபூமூஸா அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூற தாங்கள் கேட்டீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு அவர் "ஆம்" என்றார்.
உடனே அவர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று, "நான் உங்களுக்கு (பிரியாவிடை) சலாம் கூறுகிறேன்" என்று கூறினார்.
பின்னர் அவர் தம் வாளின் உறையை உடைத்து எறிந்துவிட்டு, தம் வாளுடன் எதிரியை நோக்கி நடந்து சென்று, கொல்லப்படும் வரை போரிட்டார்.