இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4584ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ يَعْلَى بْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ ‏{‏أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ‏}‏‏.‏ قَالَ نَزَلَتْ فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ، إِذْ بَعَثَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அதீவுல்லாஹ வஅதீவுர் ரஸூல வஊலில் அம்ரி மின்கும்” (பொருள்: அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; மேலும் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்)) எனும் (திருக்குர்ஆன் 4:59) இறைவசனம், அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது. நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு ‘சரிய்யா’வில் (படைப்பிரிவில்) அனுப்பியபோது (இது அருளப்பெற்றது).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1834ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ نَزَلَ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ‏}‏ فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ السَّهْمِيِّ بَعَثَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ ‏.‏ أَخْبَرَنِيهِ يَعْلَى بْنُ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ‏.‏
இப்னு ஜுரைஜ் கூறினார்: "{யா அய்யுஹல்லதீன ஆமனூ அதீஉல்லாஹ வஅதீஉர் ரஸூல வஊலில் அம்ரி மின்கும்}" (நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்) எனும் இறைவசனம், அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னு அதீ அஸ்-ஸஹ்மீ என்பவரைப் பற்றி அருளப்பெற்றது. நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைப்பிரிவில் அனுப்பினார்கள். இத்தகவலை யஃலா இப்னு முஸ்லிம், ஸயீத் இப்னு ஜுபைர் வழியாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح